பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

காரக் கற்பியல் ஐம்பத்திரண்டாம் சூத்திர உரையிலும், உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், “இதற்குக் கோப்பெருஞ் சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தார்” என்று கூறி இருப்பதனாலும் அறியலாம். பிசிராந்தையாரும், இவ்வரசருக்கும் பொத்தியாருக்கும், இருந்த நட்பினை, “பொந்தில் நட்பில் பொத்தியொடு கெழீஇ” என்று கூறினர். பிசிராந்தையார்க்கும் இம்மன்னருக்கும் இருந்த நட்பின் மேம்பாட்டினை அகச் சான்றினாலும் அறியலாம். பிசிராந்தையார் அன்னச் சேவலைப் பார்த்து, “அன்னமே! நீ வடதிசை செல்வையாயின், இடையே சோழ நாட்டினை அடைந்து, எம் நண்பர் கோப்பெருஞ் சோழரைக் கண்டு, ‘யான் பாண்டிய நாட்டுப் பிசிராந்தையார் அடியின் கீழ் வாழ்வது’ என்று கூறிய உடன் நீ இன்புறும் பெண் அன்னம் பூணத்தக்க அணிகலங்களை அளிப்பன்” என்று கூறியதனாலும் இப்புலவர் பெருமான் தாம் பாண்டிய நாட்டினராக இருந்தும் தமது இறைவன் கோப்பெருஞ் சோழன் என்றும் செப்பியதனாலும் அறியலாம்.

கோப்பெருஞ் சோழர் பிசிராந்தையார் புல்லாற்றூர் ஏயிற்றியனார், பொத்தியார், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் ஆகிய புலவர்களால் சிறப்பித்துப் பாடப்-