பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

வந்ததையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

அண்டர் மகன் குறுவழுதி பாடியனவாக நமக்குக் கிடைத்துள்ள செய்யுட்கள் நான்கு. அவற்றுள் ஒன்று புறநானூற்றிலும், மற்றொன்று குறுந்தொகையிலும், ஏனைய இரண்டும் அகநானூற்றிலும் உள்ளன.

புறநானூற்றுச் செய்யுளில் இருந்து இப்புலவன் யார் மீது இச் செய்யுளை இயற்றியுள் ளார் ? எச்சந்தர்ப்பத்தில் இதனைப் பாடியுள் ளார் என்பன அறிந்து கொள்ளா நிலையில் உள்ளன. ஆனால், இவர் பாடியுள்ள அப்பாடலால் இவர் கல்வியைப்பற்றி நல்ல எண்ணம் கொண்டவர் என்பதும், அக் கல்வியைப் பயின்றவரை நன்கு பாராட்டுபவர் என்பதும் புலனுகின்றன. தாம் பாடியுள்ளவனைப்பற் றிக் கூறும்போது, ' கல்வியென் என்னும் வல்லாண் சிருஅன் ' என்று கூறி அந்த அளவில் நிறுத்தாது, அவன் தன் தாயில்லை மிகவும் விரும்பப்பட்டவகை இருந்தான். இதற்குக் காரணம் இவன் கற்ற கல்வியேயாகும் என்பதை

ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்
கல்வியென் என்னும் வல்லாண் சிருஅன்

என்று கூறியுள்ளார். குறுந்தொகையில் இவரால் பாடப்பட்ட பாட்டு, அன்பு கலந்த இரு காதலர் தோழியின் துணை கொண்டு கூடி இன்புற்று வருகையில், பகலில் வந்து செல்