பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


நாள் கட்டும் காவலும் மிகுகின்றன. அவள் வெளியே வர ஒட்டாமல் வீட்டிலும் அடை பட்டு விடுவாள். ஆகவே, விரைவில் திருமணம் முடித்தற்கான செயலில் முனைந்து நிற்பா யாக ' என்பதாம். இக் கருத்தினைக் கொண்ட பாடலில், தலைவி தன் தலைவன் வரமாட்டான என்று எண்ணி ஏங்கிக் கூறியதாகத் தோழித் தலைவனிடம் கூறிய அடிகள் மிகவும் இரக் கத்தை எழத்தான் செய்கின்றன. வாரார் கொல் எனக் காண்தொறும் பருவரும் பருவருதலாவது துன்புறுதலாம்.

அதே அகநானூற்றில் காணப்படும் மற் ருெரு பாடல் தலைமகன் கேட்குமாறு தலைவியினிடம் தோழி சிலவற்றைக் கூறியது போல அமைந்தது. அப்படித் தோழி கூறு மாறு பாடியதன் கருத்துத் தலைவியைத் தலை வன் விரைவில் மணந்துகொள்ளத் துரண்டு தற்கேயாம். அப்பாடலில் கூறப்பட்டுள்ள உவமை படித்துச் சுவைத்தற் குரியது. அதாவது வேங்கை மரத்தின் மலர்கள் பாறைகளில் சிந்திக் கிடக்க, அத் தோற்றத்தைக் கண்ணுற்ற யானைகள், புலி பாறையின் மீதுபடுத்திருக்கிறது போலும் ! அது நம் மைக் கண்டால் பாய்ந்து நம்மைக் கொன்று விடும் ' என்று எண்ணி ஓடிவிடும் என்பதாம். அதனைப் புலவர் வேங்கை ஒள்வி புலிப் பொறி கடுப்பத் தோன்றலின் கயவாய் இரும்பிடி இரியும் " என்று பாடியுள்ளார்.