பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

இயற்கை எய்தியபின் தாம் உயிருடன் வாழ விரும்பாமல். உடன்கட்டை ஏறி உயிர்விட்டதனால் நன்கு அறியலாம். “இப்படி இறக்க வேண்டா. கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழலாம்” என்று பெரும் புலவர்கள் கூறித் தடை செய்த காலத்தும் அவர்களை எள்ளி நகையாடி உடன்கட்டை ஏறி உயிர்விட்ட பெருந்தகையார் இவ்வம்மையார். இத்தகைய கற்புக்கரசியாரை மனைவியாராகப் பெற்ற ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனார் புலமை பெருக்கைச் சிறிது கவனிப்போமாக. இவர் பாடினவாகப் புறநானூற்றில் ஒன்றும், அக நானுாற்றில் ஒன்றும் ஆக இரண்டு பாடல்கள் உள்ளன.

இவர் எவர்மீதும் பாடலைப் பாடிலர். தம் உள்ளக்கிடக்கையினையே ஒளியாது செய்யுள் வடிவில் கூறியுள்ளார். இச்செய்யுள் இவர் கூறிய வஞ்சின (சபதம்) வார்த்தைகளைக் கொண்டதாகும். இவர் கூறியுள்ள வஞ்சினத்தைப் பாருங்கள் : அது “நான் என்னோடு எதிர்த்துப் போரிடும் பகை அரசர்களை வென்று அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்டிலனேயாயின், என் அருமை மனையாளை விட்டு நீங்குவேனாக. கொடுங்கோல் புரியும் வேந்தன் ஆகுக. என் நண்பர்களுடன் மகிழும் இன்பத்தை இழந்தவனாகுக. பாண்டியர் குலம்விடுத்து மற்றைய குலத்தில் பிறந்தவனாக” என்பதாம்.