பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

மகள் புது மணத்தில் ஈடுபட்டு மொய்த்தன” என்று கூறும் மொழிகள் தோழியின் பேச்சு வன்மையினைக் காட்டி நிற்கின்றன. இச்சுவை யடங்கிய செய்யுளை நற்றிணையில் காண்க.

பரிபாடலில் இவரால் பாடப்பட்ட செய்யுளால் இவருக்குத் திருமால்மீதுள்ள பற்றும், திருமால் இருஞ்சோலை மலைமீதுள்ள அன்பும் நன்கு புலனாகின்றன. இக்காரணங்கொண்டு இவர் வைணவ நெறியினர் என்று கூடக் கூறிவிடலாம். திருமாலிடத்தில் கொண்டுள்ள பற்றினும் இவர் திருமாலிருஞ் சோலையாகிய தலத்தில் கொண்டுள்ள பற்று மிகமிக விஞ்சி நிற்கின்றது. எல்லா மலைகளிலும் திருமால் இருஞ்சோலைமலை சிறந்தது என்கிறார், அம் மலை திருமால் போன்றது என்கிறார். மக்களை நோக்கி அவர்கள் நல்வழி படுதற் பொருட்டு “மக்காள்”! திருமால் இருஞ்சோலையினை நினைமின்! அதன் புகழைக் கேண்மின்! அதனைக் கண்டு பணிமின் தெய்வம் பேணித் திசை தொழுதனிர் சென்மின்!” என்று கூறுவன இவரது பெருங்கருணைத் திறனைப் பெருக்கிக் காட்டுகின்றன. இப்பரிபாடலால் திருமால் இருஞ்சோலையின் இயற்கை அழகை இனிதின் நுகரலாம். மந்தி (குரங்கு,) வரை வரைபாய, மடமயில் அகவ, குயில் இனம் கூவ, சுனை எலாம் மலர, சுனை சூழ் சினை எலாம் செயலை (ஒரு வகைமலர்) மலர. வேங்கை மலர என்பன, இயற்கை யழகை