பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


இயல்பினர் என்பது பிசிராந்தையார் இவருக்குக் கூறியுள்ள அறவுரைப் பகுதிகளால் அறிய வருகிறது. அவ்வறவுரை அறிவுடை. நம்பிக்கு அறிவுறுத்தப் பட்டதேனும், அகிலம் காக்கும் எல்லா அரசர்க்கும் உகந்த அறவுரையாகும்.

பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை, நம்பியை நோக்கி, "மன்னா! ஒருமா என்னும் அளவில் குறைந்த நிலத்தில் விளைந்த நெல்லினை அறுத்துக் கவளம் கவளமாக யானைக்கு உண்ணுமாறு செய்துவரின், அவ்வுணவு பல நாளைக்கும் ஆகிவரும். அவ்வாறு இன்றி, நூறு என்னும் எண்ணிக்கைக்குரிய பெருநிலங்களைப் பெற்றிருந்தும், யானையைத் தனித்து விட்டு உண்ணுமாறு செய்தால், அவ் யானை உண்ணும் உணவினும் அதன் காலால் மிதியுண்டு அழியும் நெல் மிகுதியாகி, அப்பெரு எண்ணிக்கையுள்ள நிலங்களிலிருந்து கிடைக்கும் நெல் சின்னாட்களுக்கே உதவக் கூடியதாக இருக்கும். இதுபோலவே அரசர்களும் குடிமக்களிடமிருந்து வரிப் பணமாகச் சிறிது சிறிதாகப் பெற்றால், நாடு செழித்துப் பல நாள் அழிவின்றித் துலங்கும். அரசரும் பன்னாள் நலனுற வாழ்வர். அவ்வாறு இன்றிக் குடிமக்களை வருத்தி மிகுதியாக வரிப் பணத்தை வாங்கினால் நாடு விரைவில் அழிந்துபடும். அரசரும் கெட்டொழிவர். ஆகவே, உறுதி கூறும் நல்லமைச்சைப்