பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


செருக்குக் காரணமாகப் போர்க்கு எழுந்தால் அவர்களை வென்று அடக்குவேன் என்ற உறுதிப் பாட்டையும் உடையவர். அவ்வாறு அப் பகைவேந்தரை வென்றிலேன் எனில், "எந் நிழலில் வாழும் குடி மக்களும் மற்றும் உள்ளாரும் இவ் விறைவன் கொடியன்" என்று கூறிக் கண்ணீர் விட்டு என் குடியினைப் பழித்து, "கொடுங்கோலன் இவன்" என்று கூறத்தக்க நிலையைப் பெறுவேனாக" என்றும், புலவர் என் நாட்டைப் பாடாது ஒழிவாராக என்றும், இரப்பவர்க்கு ஈயாத உலோபத் தன்மை என்னை வந்து உறுவதாக" என்றும் வஞ்சினம் கூறியவர்.

இவ்வாறு இவர் கூறிய வஞ்சினமொழிகளில் இம் மன்னரது உளப் பண்புகள் பல வெளியாகின்றன. இவர் தம் நிழலில் வாழும் மக்கள் தம்மைக் கொடியன் என்று கூறாத வகையிலும், கண்ணீர் சிந்தாத நிலையிலும், கொடுங்கோலன் என்ற பெயரை எடுக்காத நிலையிலும் அரசு புரிய வேண்டும் என்ற கொள்கையும், அவ்வாறே அரசு புரிந்தவர் என்பதும், தம்மைப் புலவர்கள் பாடாது இருப்பது தம் வாழ்க்கைக்கே இழுக்கு என்று அறிந்து, புலவர் பாடும் வகையில் கொடையும் வீரமும் கொண்டு விளங்க வேண்டும் என்பதை அறிந்து வீரமும் ஈரமும் கொண்டு விளங்கத் தம் வாழ்நாட்களைக் கழித்தவர் என்பதும் மாங்குடி மருதைைரக் குறிப்பிட்டுப் பேசு