பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மைந்தன் யதோர் இடையூறும் இடையில் எய்தாது கரையைச் சாரின், அவனுக்கு என் அரசுரிமையைத் தருகின்றேன்” என்று உறுதி கூறினன்.

சோழனது உரைகளை நம்பி பீலிவளையும் அவனை மணந்து கொண்டனள். சில காலம் பீலிவளையோடு இன்புற்ற சோழன் தன்னாடு திரும்பி விட்டனன். இறைவன் அருளால் இன் மகவும் பிறந்தது. நாகபட்டினத்துச் சோழன் கூறியபடி குழந்தையைத் தொண்டைக் கொடி அடையாளமாகக் கட்டிக் கடலில் இட்டனள். குழந்தையும் ஆண்டவன் அரு ளால் இடையில் அவலம் ஒன்றும் உறாமல் கரையை அடைந்தது.

இம் மகன் கடல் அலையால் உந்தப்பட்டுக் கரையை அடைந்தமையால் இளந்திரையன் என்று கூறப்பட்டனன். தொண்டைக் கொடியினால் இவன் பிணிக்கப்பட்டு அக் கொடியுடன் கரையை அணுகியமையால் தொண்டை மான் இளந்திரையன் எனப்பட்டனன். திரையன் எனவும் திரையல் எனவும் இவனை நூல்கள் குறிப்பிடும்.

இம் மகவு சோழ மன்னனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்க்கப்பட்டுத் தக்க வயது வந்ததும் காஞ்சியம் பதிக்கு அரசராக்கப்பட்டார். சோழர் குடிக் கலப்புடையராயினும், மூவேந்தரோடு ஒருங்கு வைத்து எண்ணப்பட்ட பெருமை சான்றவரா-