பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


பொழிந்தது. அந்நீரைப் பெற்ற மலர்கள் மலர்ந்தன. அங்ங்னம் இருக்க, நீ எப்படி இதனைக் கார்ப்பருவம் என்று கருதலாம்?" என்று கூறும்போது தலைவியை ஆற்றுவிக்க வேண்டுமென்ற கருத்துக் கொண்டு மேகத்தை "மதியின்று மறந்து கடல் முகந்த கமம் சூல் மாமழை," என்று கூறியிருப்பது சுவை தருவதாகும். அதாவது அறிவில்லாமல் மேகம் கடல் நீரை முகந்து கருவுற்றது என்பதாம். அதே பாடலில் வெயிலின் பரப்புக்கு உவமை கூறுகையில் "துகில் விரித்தன்ன வெயில்" என்று ஆசிரியர் கூறுவதைப் படித்து இன்புறல் வேண்டும். மற்றொரு பாடலில் கடற்கரையில் நண்டுகள் அலையால் உந்தப்பட்டுக் கரையினை அணுகும்போது, அதனைப் பிடிக்க இளம் பெண்கள் முயன்று ஓடுதற்குள் அந்நண்டு ஓடி வளையில் ஒளிந்து கொண்டபோது வளைந்து நிற்பதையும் இக் கவிஞர் கவினுறத் தெரிவிக்கப்புக்க போது "ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றாது அசைஇஉள் ஒழிந்த வசைதீர் குறுமகள்" என்பர்.

புறநானூற்றில் இப்புரவலப் புலவர் கூறியுள்ள கருத்தினையும் கருதுவோமாக. அப் பாடல் அரசர்கள் அரசினை எம்முறையில் நடத்தவேண்டும் என்ற குறிப்பினை அழகுபடக் கூறுகிறது. நேர்முகமாகக் கூறின் தம்மை ஒத்த மன்னர் "இவனே நமக்கு அறிவு கொளுத்துபவன்?" என்று சினம்