பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுகிறார் பேராசிரியர். அவ்விடங்களிலெல்லாம் மானசீக மாகப் புத்தர் பெருமானைத் தரிசிக்க அவர்தம் புனித வர லாற்றை உணரக் கவிமணியின் கவிதைகள் அவ்விடங்களி லெல்லாம் தம் மனக் காதுகளினால் கேட்டுக் களித்த நிலையை நயம்பட நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் பேராசிரியர் அவர் &恋了。 பாரதியும் பட்டிக்காட்டானும் என்ற தலைப்பில் அமைந்த கவிமணியின் கவிதையை கவிதைத் திறனாய்விற்குக் கவி தையாலேயே திறனாய்ந்த அற்புதத் திறனாய்வுக் கவிதை இது. பின்னோர்க்கெல்லாம் இது ஒரு கலங்கரை விளக்கம் போல் அமைந்து என்றும் நின்று வழிகாட்டும் சிறந்த ஓர் இலக்கியமா கும்' என்று உவந்து பாராட்டுகிறார் பேராசிரியர், சுந்தரமூர்த்தி வழியில் என்ற இயலில் இயலுக்கான பெயர்க் காரணத்தை தருகிறார் பேராசிரியர். தேவாரத்தில் திருத்தொண்டத் தொகையைப் பாடி அடியார் வழிபாட்டைத் தொடங்கி வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். தொடர்ந்து நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் அந்தாதி பாடினார். அந்தப் பாதையைப் பின்பற்றி பாரதியாரும் பாரதிதாசனாரும் பல்வேறு அறிஞர்கள், தொண்டர்கள் முதலானோரைப் பற்றிப் பாடினர். அம் மரபை அடியொற்றிக் கவிமணியும் வாழ்த்துப் பாடல்களாகவும் இரங்கற் பாக்களாகவும், போற்றும் முறையி லும் பாடல்களை அமைத்துள்ளனர். கவிமணியின் இப்பாடல் களைப் பற்றிய செய்திகள் இடம் பெறும் இவ்வியலுக்குச் சுந்தரமூர்த்தி வழியில் என்று பேராசிரியர் பெயர் சூட்டியுள்ள முறை சுவையூட்டுவதாக அமைந்துள்ளது. கவிமணி பல அறிஞர்களைப் போற்றிப் பாடியுள்ளார். பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களும் கவிமணியும் இணை பிரி யாத தோழமையுணர்வுடன் பழகியவர்கள். கவிமணியின் நூல்கள் பலவற்றைப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் முன்னுரை அணி செய்திருக்கிறது. தம்முடைய படைப்புகள் பெரும்பாலானவற்றைப் பிள்ளையவர்களிடம் படித்துக் காட் டிய பிறகே அவற்றை அச்சு வாகனம் ஏற்றியவர் கவிமணி, பிள்ளையவர்களைப் பற்றி அவர் ஒரு சிறிய பாடல் கூடப் படைக்கவில்லை என்பது வியப்பான ஒரு செய்தி. ஒரு சமயம் ஒரு நண்பர் கவிமணியிடம் நீங்கள் உங்கள் அன்பிற் கும் மதிப்பிற்குரிய வையாபுரிப் பிள்ளையவர்களைப் பற்றி ஒரு பாடல் கூடப் புனையவில்லையே என்று கேட்டாராம்.