பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 86 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு அவனுக்கு ஏற்படுகின்றது. அதில் அவன் மனம் ஈடுபடு கின்றது. சில நாட்களில் அவன் ஊருக்குத் திரும்புகின் றான். அங்கே தன் நண்பர்களுக்கு அப்பாடல்களின் அருமை பெருமைகளைத் தான் உணர்ந்த மட்டில் விவரித் துக் கூறுவதாகக் கவிமணி அவன் வாயின் மூலம் பேசுகின் றார். உள்ளக் கருத்தையெலாம உள்ளபடி யான்இந்த வெள்ளைக் கவியில் விளிம்பினேன்" என்று ஒரு வெண்பாவில் தொடங்குகின்றது கவிமணியின் திறனாய்வு. பாட்டுக் கொருபுலவன் பாரதி,அடா - அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினான், அடா! கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே,அடா! - அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய்,அடா! (2) என்று பட்டிக்காட்டான் உளறுவதுதான் கவிமணியின் திறனாய்வு; பட்டிக்காட்டான் வாயில் வைத்துப் பேசுவது. (அ) பாடல்களில் பொதுநோக்குத் திறனாய்வு 1. ஞானத்திலேபர மோனத்திலே - உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையி லேஉயர் நாடு’ 2. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே? 4. ம.மா. பாரதியும் பட்டிக்காட்டானும் - 1 பா.க. தே.கி. பாரத நாடு - 1 மேலது. வே.பா: அச்சமில்லை - i.