பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் 卡 97 景 சோம்பல் மிகக்கெடுதி பாப்பா - தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே, பாப்பா! தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ திடங்கொண்டு போராடு பாப்பா! (10) தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா! அமிழ்தில் இனியதடி பாப்பா - நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! (11)2 என்ற பாடல்கள் பண்ணோடு பாடப்பெற்று நாட்டுப்புறத் தான் செவியில் தேன்போல் வந்து பாய்கின்றன. கள்ளங் கபடம் அறியாத அவன் வாயிலிருந்து, ‘பாப்பாப் பாட்டிலே - நெஞ்சைப் பறிகொ டுத்தேனடா! சாப்பாடேதுக் கடா - சீனி சர்க்கரை ஏதுக்கடா! (12) என்ற பாடல் சருக்கரைக் கட்டிபோல பறந்து வெளிவரு கின்றது. பாரதியின் பாஞ்சாலி சபதம் இருபதாவது நூற்றாண் டில் உருவான ஓர் அற்புதமான தமிழ்க் காப்பியம். அத்தின புரத்தின் வருணனையில் சோலைகள், வாவிகள், வேள்விச் சாலைகள், மந்திர கீதங்கள் முழங்கும் இடங்கள், சாத்திர ஆராய்ச்சிக் கழகங்கள் இவை அற்புதமாகக் காட்டப் பெறுகின்றன. பாண்டவர்கள் அத்தினபுரத்திற்கு வரும் வழியில் பார்த்தன் பாஞ்சாலிக்கு பரிதியின் எழிலைக் காட்டும் பகுதி, நேரில் காண்பது போன்ற சூதாட்ட வருணனைப் பகுதிகள், பாஞ்சாலியை துரியோதன் 26. பா.க. - பலவகைப் பாடல்கள் - பாப்பா பாட்டு கவி-8