பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

号、98 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு மன்றுக்கு அழைத்து வருமாறு பணித்தபோது சகத்தில் உண்டான அதர்மக் குழப்ப வருணனை போன்ற பகுதிகள் கதையினை நேரில் காண்பது போன்ற பிரமையை உண் டாக்கி விடுகின்றது. இதனைப் பாடக் கேட்கும் வாய்ப்பி னைப் பெற்ற பட்டிக்காட்டான், அன்னை "பாஞ்சாலி - சபதம்’ அறைதல் கேட்டேனடா! முன்னைக் கதையெல்லாம் - கண்ணின் முன்நடந்த தடா (13) என்று கூறுகின்றான். காவியத்தை உணர்ச்சியுடன் படிப் போர் காவியத்தில் காணப் பெறும் நிகழ்ச்சிகள் யாவும் படிக்கும்போதே படிமக் காட்சியாகக் (imagery) காண முடிகின்றது. வந்தே மாதரம்" என்ற பாடல் நாட்டுப் பற்றைக் கிளர்ந்தெழச் செய்து விடுகின்றது. ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (3) புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித் தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத் தொண்டு நிலைமையைத் துவென்று தள்ளி வந்தே மாதரம் என்போம் (6) என்று உணர்ச்சியோடு பாடும் போது உண்மையில் ஓர் 27. தே.கீ. வந்தே மாதரம்