பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

을 10이 용 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ‘எங்கள் நாடு’தான் - பூபாள இசையி லேறிடுமேல் கங்கை யாறுபோல் - உள்ளத்தில் களிப்பொ ழுகுதடா (15) என்று சிற்றுாரான் வாயில் வைத்துப் பேசுவர். 'சின்னஞ் சிறுகிளி என்ற பாட்டு கண்ணன் பாட்டில்" 'கண்ணம்மா என் குழந்தை (8) என்ற பாட்டின் தொடக்க மாகும். பாரதி பராசக்தியைக் கண்ணம்மா என்று பெண் குழந்தையாக்கிக் குழந்தையிடமே நேரில் பேசுகின்றார். 'மக்கட் பேறு என்பது ஒரு தாய்க்கு தந்தைக்கும் கூடத்தான் - ஒரு மாபெரும் பேறு அல்லவா? குழந்தை யைப் பெற்ற தாய் கொள்ளை இன்பம் அடைகின்றாள். பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா! பேசும்பொற் சித்திரமே! அள்ளி யணைத்திடவே - என்முன்னே ஆடிவருந் தேனே! (2) என்ற அடிகளில் அவள் பெறும் இன்பம் பளிச்சிடுகின்றது. ஒடி வருந்தேனை ஆடித் திரியும் அன்புப் பெட்டகத் தைத் தூக்கி அணைந்தவண்ணம் அதன் உச்சியை முகந் தால் அவள் கொள்ளும் பெருமிதம் சொல்லி முடியாது. குழந்தையின் பண்பை ஒருதாய் மாத்திரம் மெச்சிக் கொண் டிருந்தால் போதுமா? ஊரில் உள்ளவர்கள் அதனைச் மெச்சிப் புகழும்போது அவள் மேனியெல்லாம் சிரிக்கின் திறது. உச்சிதனை முகந்தால் - கருவம் ஓங்கி வளருதடி! மெச்சி யுனைஊரார் - புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி! (4)