பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் མ}མ་ 3.(34 མ་རྨིག་ தாயின் மகிழ்ச்சி பாரமானியில் காற்றழுத்தம் ஏறுவது போல் ஏறிக் கொண்டே போகின்றது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்ற வள்ளுவர் வாக்கை நினைந்து பாடுகின்றார் போலும்! தூக்கிய குழந்தையைத் தாய் உச்சி முகப்பதுடன் விட்டு விடுகின்றாளா? அதன் கன்னத்தில் முத்தம் பதிக் கின்றாள். பலபடியாகத் தழுவி மகிழ்கின்றாள். மகிழ்ச்சி கள் வெறியை எட்டி விடுகின்றன. உன்மத்தம் அடைகின் றாள். கன்னத்தில் முத்தமிட்டாள் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ! உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா! உன்மத்த மாகு தடீ! (5) குழந்தையை தழுவும்போது உண்டாகும் மகிழ்ச்சியைச் சொல்லும் முன்பே கண்ணம்மா என்று சொல்லி மகிழ் கின்றாள். இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும் என்று சொல்லி வைக்கலாம். அவை பட்டிக்காட்டானின் மனத்தையே உருக்கி விடுகின்றன. 'சின்னஞ் சிறுகிளி' - கனவில் தினமும் காணுதடா கன்னங் குழியவே - முத்தமும் கனிந்தளிக்குதடா (16) என்று தன் அநுபவத்தை வெளியிடுகின்றான். 'கண்ணன் - என் காதலன் (10, 11, 12, 13, 14) என்ற தலைப்பில் ஐந்து பகுதிகள் உள்ளன. 29. குறள் - 69