பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் -j- 103 + தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த வைய முழுதுமில்லை தோழி! (5) இஃது ஐந்தாம் பகுதியில் ஐந்தாம் பாடல். இந்தப் பாடல்களைச் சந்தர்ப்பம் அறிந்து பாரதி குறிப்பிட்ட மெட்டில், இராகத்தில் படித்தால் - இல்லை பாடினால் - அவன் குறிப்பிட்ட சுவைகள் கொப்புளித்து நிற்பதைக் காணலாம். இந்த அநுபவத்தைக் கேள்வி ஞான முடைய நாட்டுப்புறத்தான், 'கண்ணன் காதலன் - எனக்கொரு களியமுத மடா! விண்ண முதமுமே - அதனை வெல்ல மாட்டாதடா! (17) என்ற பாடலில் வெளியிடுகின்றான். 'குயில் பாட்டு ஒர் அருமையான காதல் காவியம். "இக்காலத்தில் எழுதப்பெறும் காதல் பாட்டுகள் அகத் துறை மரபுகளைப் பின்பற்றாது தற்காலப் பண்புகளுடன் இருக்க வேண்டியது அவசியம்" குயில் பாட்டு இங்ங் னம் அமைந்த ஒரு காதல் பாட்டு என்றும் கருதுகின்றார். குயில் எப்படிப் பாடுகின்றது? 'குக்குக்கூ, குக்குக்கூ, குக்குக்கூ, குக்குக்கூ என்பதாக. இவ்விசையைச் செவிம டுக்கும் கவிஞருக்குக் குயில் பாட்டின் தொக்க பொருள்: காதல் காதல் காதல் காதல் போயிற் காதல்போயிற் சாதல், சாதல், சாதல் என்பது. மாயக்குயில், 30. சுப்பிரமணிய அய்யர், ஏ.வி. தற்காலத் தமிழிலக்கியம் (1942)