பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 1Q4 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்று மானுடவர் பேச்சில் மாயச் சொல் கூறுகின்றது. இப்படிச் சில இடங்கள். காதலுற்று வாடுகின்றேன், காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்" என்று குயில் மாட்டுடன் பேசுவதாக அமைக்கின்றார் கவிஞர். குயில் பாட்டில் குயில் சோதிப் பெண்ணாக மாறியபின் அவள் அழகை, . கவிதைக் கனியிழிந்த சாற்றினிலே பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி, அதனூடே இன்னமுதைத் தான்கலந்து, காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் மாதவளின்மேனி வகுத்தான் பிரமன் என்பேன்" என்று இரசம் சொட்டும் கவிதை எல்லையாக வருணிப் பார். பாடல் முழுதும் காதல் மயம். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆண்டவன் இருப்பதுபோல் பாட லில் காதல் மணம் எங்கும் வீசுகின்றது. இதனைப் பட்டிக் Gift -- LIIGET, 'குயில் பாட்டிலே - காதல் கொப்புளிக்கு தடா! செயல் மறந்தேனடா! - லாகிரி சிரசிற் கொண்டதடா! (18) என்று தன் அநுபவத்தைத் தெரிவிக்கின்றான். 31. கு.பா. குயிலின் காதற் கதை - அடி (13-14) 32. மேலது. குயிலும் மாடும் அடி (59-60) 33. மேலது. குயிலின் முற்பிறப்பின் வரலாறு - அடி (242-45)