பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 星C8 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இன்னும்பல் நூல்களிலே இசைத்த ஞானம் என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?" என்ற அன்னை படைத்த ஞானச் செல்வங்களையெல்லாம் எண்ணி எண்ணிக் களிக்கின்றார். விடுதலையே சுதந்திரமே - பாரதியின் தாரக மந்திரம். நாட்டுப் பற்றைப் போலவே இதுவும் ஒரு பாரதீயம். நாட்டுப் பற்றிலிருந்து கிளைத்தெழுந்த ஒரு கொள்கை. 'வந்தே மாதரம் ஒன்றே தாரகம்’ என்பது இதன் உயிராய பண்பு. எனவே, வீர சுதந்திரம் வேண்டிநின் றார்பின்னர் வேறொன்று கொள்வாரோ? - என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில் அறிவைச் செல்லுத்து வாரோ?" என்று கேட்கின்றார், என்றும் விடுதலையையே வேண்டி நிற்பவர். வருவதை முன்னுணர்ந்து ஆற்றலோடு நவிலும் அறி வுத் தெளிவு தனிப் பெறும் புலமைக் கூறாகும். ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே என்று' என்று நாடு விடுதலையடைவதற்குப் பல்லாண்டுகட்கு முன்னரே பாடினார். 36. மேலது. பாரத மாதா நவரத்தின மாலை - 3 37. தே.கீ. சுதந்திரப் பெருமை - 1 38. தே.கீ. சுதந்திரப் பள்ளு - பல்லவி