பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போனால் அவருடைய படைப்புகளை ஆழமாகக் கண்டு தனது திறனாய்வும் பார்வையால் அடையாளம் காட்டுகிறார் பேராசிரியர் கப்பு ரெட்டியார் அவர்கள். அவருடைய இத் திறனாய்வு நூல் ஒப்பீட்டு முறையில் அமைந்த திறனாய்வாகத் திகழ்கிறது. கவிமணியுடன் பாரதியாரை, பாரதிதாசனை. நாமக்கல் கவிஞரை ஒப்பிட்டுக் காட்டுகிறார். கவிமணியின் பாடல்களை படிக்கும் போது பேராசிரியருக்குத் தேவார மும், ஆழ்வார் பாசுரங்களும் கண்முன்னே தோன்றுகின்றன. பேராசிரியரின் ஆசிய ஜோதியைப் பற்றிய மதிப்பீடு நம் கண்முன் புத்த கயையைக் கொண்டு வந்து காட்டுகிறது. கவியளியின் கவிதைகளை ஒப்பிட்டு முறையில் நடுநிலை யில் நின்று திறனாய்ந்து நல்லதொரு திறனாய்வு நூலினைப் படைத்தனித்த பேராசிரியருக்குத் தமிழ் உலகம் குறிப்பாகத் தமிழ்க் கவிதை உலகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையன்று. 严、 il + - இராதா செல்லப்பன்