பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 1,16 - கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம் (1)" சங்கப் பலகையிலே - அன்று தனியமர்ந்த நூலாம் பங்கய நான்முகனே - தமிழில் பகர்ந்த மாமறையாம் (2) புத்தகக் காட்டினிலே - புகுந்து புத்தி மயங்குவதேன்? பத்தியோ டிந்நூலை - நிதமே படித்தால் போதுமையா! (4) இயேசு நாதர் உலகம் உய்ய வந்த பெரியார். இவரைப் பற்றிக் கவிமணி இயற்றியுள்ள பாடல்கள் முப்பது இரட்ச கர் என்ற தலைப்பில்". அவற்றுள் சில: பூமியை ஆளுதற்குத் - தேவ புத்திரன் வந்துதித்தான்; சேமம் பிறக்குமென - யூதர் சிந்தை களித்திருந்தார் (11) "ஈசன் நாமத்தை - அனுதினம் ஏத்திப் புகழவேண்டும்; தாச தாசனாய்ப் - பணிந்து தருமம் காக்கவேண்டும் (12) உன்னுயி ரைப்போல் - இந்த உலகில் உயிரையெல்லாம் மன்னும் அன்பொடுநீ - என்றும்: மதித்து வாழவேண்டும் (13) 4. ம.மா. திருக்குறள் 5. ம.கா: இரட்சகள்