பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-j- 118 -4- கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு என்னைச் சுடுகின் றவன்மீதும் இரக்கம் கொண்டு முகமலர்ந்து மன்னித் துயிரை விடுவனென்ற வார்த்தை முற்றும் பலித்ததையா உன்னையொத்த அருளாள உலகில் வேறு கேட்டறியோம்! அன்னை பாரதத் தேவிதரும் அருமை காந்தி மாமணியே! (6) கஸ்தூரிபாய்' இப்பெருமாட்டி காந்தியடிகளின் வாழ்க் கைத் துணைவி; மனைத்தக்க மான்புடையாள். இவரைப் பற்றி ஒரு பாடல். வையம் புகழும் காந்திமகான் வாழ்க்கைத் துணையாய் வந்துநிதம் செய்யும் தொழிகள் ஒவ்வொன்றும் திருந்தச் செய்து கண்கண்ட தெய்வம் கணவன் என்றுள்ளம் தெளிந்த தாயே! நீளம்மை வெய்ய துயரில் வீழ்த்தியின்று விண்ணா டாளச் சென்றனையோ! 2. ஞானச் செல்வர்கள் இவர்களில் இராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகா னந்தர், இராமதீர்த்தர், அரவிந்தர், சுத்தானந்த பாரதியார், அம்பலவாண தேசிகர், குன்றக்குடி அடிகளார் அடங்கு வர். இவர்களைப் பற்றிய பாடல்கள்: இராமகிருஷ்ணர்: வங்கநாடு ஈன்ற மாமுனிவர். சக்தி வழிபாட்டாளர். 7. ம.ம. கஸ்தூரிபாய்