பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் <!- 121 -j வில்லை என்பதை நினைக்கும்போது வியப்பாகவே உள் ளது. பாரதியின் பாடல்களில் தாயுமான அடிகள் இடம் பெற்றார். ஆனால், வள்ளல் பெருமான் இடம் பெற வில்லை. இதுவும் வியப்பே. விவேகானந்த அடிகள்". இவர் இராமகிருஷ்ணரின் ஈடும் எடுப்புமற்ற சீடர். வேதாந்த நெறியை மேலை நாடுகள் உணரச் செய்த மாமேதை. இவரைப் பற்றிய ஒரே பாடல்: சீர்பெருகு வங்கநிலம் சிறக்க வந்தோன்; பூநீராம கிருஷ்ணபதம் சிரமேற் கொண்டோன், பார்புகழும் வேதாந்தப் பயிர்வ ளர்த்தோன் பாரதத்தின் பெருமையெங்கும் பரவச் செய்தோன்; வேர்பறிய எதிர்வாதம் விரித்துக் கூறி வீண்வாதம் செய்பவரை வென்று வெற்றித் தார்புனைந்த தவயோகி விவேகா னந்தன் தாள்பணிந்து வாழ்வோம்.இத் தரணி மீதே. இராமதீர்த்தர்": இப்பெருமானின் போதனைகளாக ஐந்து பாடல்கள் உள்ளன. இவை ஐந்தும் ஐந்தெழுத்து மந்திரமாகக் கொள்ளத் தகும். அவற்றுள், ஒய்ந்து சோம்பி உறங்கா தேயடா! ஊக்கம் பெருக உழைத்துமுன் னேறடா! வாய்ந்த தொழிலில் மலையா தேயடா! மனமதில் ஒன்றி மகிழ்ச்சி கொள்ளடா (1) கற்பனைக் குதிரை கடவுதல் ஒழியடா! காரியம் பொருளிற் கண்டு தெரியடா! விற்பனர் விதிகளை விளம்புதல் வீணடா வினையில் விளைந்த விவேகம் கானடா (4) 10. ம.ம: விவேகானந்தர் 11. ம.மா.: இராமதீர்த்தரின் போதனை