பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் கானல்நீர் விழைந்த மான்என உலகக் கட்டினை நட்டுழன்று அலையும் ஈனவஞ் சககெஞ் சகப்புலை யேனை ஏன்றுகொண் டருளும்நாள் உளதோ ஊனம்ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்குசீர்ப் பிரணவ ஒளியே வேல்நவில் கரந்தோர்க் கினியவா சித்தி விநாயக விக்கினேச் சுரனே (11) * சங்கம்.வளர்த் திடவளர்ந்த தமிழ்க்கொடியைச் சரசுவதி தன்னை அன்பர் துங்கமுறக் கலைபயிற்றி உணர்வளிக்கும் கலைஞானத் தோகை தன்னைத் திங்கள்நுதல் திருவை.அருட் குருவைமலர் ஓங்கியபெண் தெய்வந் தன்னைத் தங்கமலை முலையாளைக் கலையாளைத் தொழுதுபுகழ் சற்று நிற்பாம்" - இராமலிங்க வள்ளல் என் வாழ்நாளில் கல்லூரி வாழ்க்கை தொடங்கி என் மனத்தை அதிகமாக ஈர்த்தது அறிவியல், அஃது இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றது. 1941 ஜூன் முதல் நாள் தொடங்கி துறையூரில் புதிதாகத் தொடங்கப் பெற்ற உயர்நி லைப் பள்ளி முதல் தலைமையாசிரியர் பணியை ஏற்ற நாள் முதல் மக்கள் உணர்வைக் கல்வியின்பால் ஈர்க்கச் செய்வதற் குத் துணையாயிருப்பதற்கு உதவுவது மக்கள் பேசும் மொழி தமிழ் என்பதனை உணர்ந்தேன். நான் உயர்நிலைப் பள்ளி மாணவனாக 5.6ஆம் படிவங்களில் பயின்றபோது தமிழ் கற்பித்த இரு தமிழாசிரியர்கள் ஊட்டிய, உறங்கிய நிலையி லிருந்த தமிழுணர்வு இப்பொழுது கிளர்ந்தெழத் தெடாங் கியது. 1. திருஅருட்டா - மூன்றாம் திருமுறை - சித்தி விநாயகர் பதிகம் - 11. 2. மேலது மேலது கலைமகள் வாழ்த்து - 2