பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் 一来 125 斗 ஐயன் துறைசைக் குருநாதன் அடியாாக கருளஅம பலவாணன வையம் புகழ நீடுழி வாழ்க! வாழ்க! வாழ்கவே! (3) தவத்திரு குன்றக்குடி அடிகள்". தருமபுரி ஆதீனத்தி லிருந்து குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்துச் சின் னப்பட்டப் பொறுப்பை (1949-50) ஏற்றிருந்த காலத்தி லேயே இக்காலத்திற்கு வேண்டாத, பொருந்தாத சில மடத்துச் சம்பிரதாயங்களைக் கைவிட்டதனால் பொதுமக் கள் உள்ளத்தைக் கவர்ந்தவர்கள். ஏனைய மடாதிபதிகள் போல் மூலவராகவே இராமல் உற்சவராக எங்கும் சென்று சமயநெறியையும் தமிழ் நெறியையும் பரப்பி வந்தவர்கள். சமயமும் தமிழும் இந்த அடிகளாரின் மூச்சா கவும் பேச்சாகவும் இருந்து வந்ததைத் தமிழ் கூறு நல்லுல கம் நன்கு அறியும். இவரைப் பற்றிக் கவிமணியின் ஐந்து பாடல்கள் உள்ளன. சைவம் வளரத் தமிழ்வளரச் சலியர் தென்றும் தொண்டாற்றி வையம் புகழ நல்லறங்கள் வளர்ந்து நாட்டில் புலவர்களை மெய்யன் போடு பாராட்டும் மேலோன் அருணாசல அடிகள் ஐயன் குன்றக் குடிமுருகன் அருளால் வாழ்க! வாழ்கவே! (1) இனிய தமிழில் சைவத்தை எவரும் அறிய எடுத்தோதி கனியும் அன்பால் அறம்பேணிக் கற்றோர் போற்ற விளங்கிடுநம் 15. ம.மா. முத்துக்குவியல்