பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ుఖ §

  1. 26
  • கவிமணியின் தமிழ்ப்பணி ஒரு மதிப்பீடு

புனிதன் அருணா சலஅடிகள் புகழ்சேர் வாழ்க்கை வரலாறு நனியில் வுலகில் சிறந்தோங்க நாளும் வாழ்க வாழ்கவே! (2) மெய்யறிவே எத்திசையும் மேலோங்க, வீண்வாதப் பொய்யழிந்து பாதலம் புக்கொழியச் - செய்யபுகழ் ஐயனெம் அண்ணல் அருணா சலஅடிகள் வையமிசை வாழ்க மகிழ்ந்து (4) 3. புலவர் - கவிஞர் பெருமக்கள் இவர்களுள் கம்பன், ஒளவை, பாரதியார், பேராசிரி யர் சுந்தரம் பிள்ளை, இரவீந்திரநாத் தாகூர், ஆறுமுக நாவலர், உ.வே.சாமிநாதய்யர், திரு.வி.கல்யாண சுந்தர முதலியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், டி.கே. சிதம்பரநாத முதலியார், அபிநவ காளமேகம் அனந்த கிருஷ்ண அய்யங்கார் ஆகியோர் அடங்குவர். கம்பன்: 'விருத்தம் எனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்' என்று சிறப்பிக்கப் பெறும் கம்பனைப் பற்றிப் பத்தொன் பது பாடல்கள் உள்ளன." இவை தவிர வேறு சில பாடல் களில் இவன் பெருமை சிறப்பிக்கப் பெறும் இடங்களும் உள்ளன. கம்பன் கவியின் கனியமுதம் உண்டிட,மால் அம்புவியில் வந்திங்கு அவதாரம் செய்தானோ' என்பது ஓரிடம், நிற்க. இவனைப் பற்றிய வேறு சில: ! É. 重了。 க.க. கம்பன் . 19 மேலது மழலை - தாலாட்டு - 13