பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் 용~ 27 -- அயன் டைப்பினையும் - திருத்தி அழகு செய்திடு வோன்; நயம்தெ ரிந்துகதை - நடத்தும் நாட கக்கவி ஞன் (2)” இந்திர சாலமெல்லாம் - கவியில் இயற்றிக் காட்டிடு வோன்; மந்திரச் சொல்லாலே - உள்ளம் மயங்கச் செய்திடுவோன் (3) உலக உண்மைகளை - எவரும் உணரக் கூறிடு வோன்; அலகி லாக்கலைகள் - உறையும் ஆலய மாகிடு வோன் (4) அரக்கர் நெஞ்சறி வான் - முனிவர் அகமும் கண்டறி வான்; குரங்கின் உள்ளறிவான் - வேடன் குணமும் நன்கறி வான் (11) எத்திக்கும் போற்றும் இராமன் திருக்கதையைத் தித்திக்கும் செந்தமிழில் செய்தளித்து - நித்தமும் அம்புவியில் மக்கள் அமுதம் அருந்தவைத்த கம்பன் கவியே கவி (17) சுவைக்குச் சில காட்டப் பெற்றன. எல்லாப் பாடல்களுமே எழில்மிகு தெய்வக் கனிகள். ஒளவை: 'பாட்டி சொல் தட்டாதே! என்பது ஒரு சுவைமிக்க திரைப்படம். அதுபோல, சிறுவர்கட்கு - மன்பதையிலுள்ள பேரன்மார்கட்கு - ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி போன்ற நீதி 18. மேலது - கம்பன் - 2,3,4,11,17