பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் மொழி உள்ள அளவும் நிலைத்து நிற்கும். இது தெய்வ பக்தி, காதற் பெருமை, மகளிர் மாண்பு, நாட்டுப் பற்று, விடுதலை உணர்வு என்பவற்றை உணர்த்திக் கொண்டிருக் கும். இந்நாடகத்தில் தமிழ் வாழ்த்தாகவுள்ள பாடலின் ஒரு பகுதிதான் தமிழக அரசால் 'தமிழ்த்தாய் வாழ்த்தாக' மேற்கொள்ளப் பெற்று வழக்கத்தில் இருந்து வருகின்றது. இத்தகைய பெருமகனாரைப் பற்றிக் கவிமணி பதி னோரு பாடல்களை இயற்றியுள்ளார்." இவை 1947 ஏப்பி ரல் திங்கள் பாடப்பெற்றன . இவர் இகவாழ்வை நீத்து ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுவதன் நினைவாக. அவற்றுள் சில: 19. ஆரா அமுதம் அனைய தமிழ்வளர்த்த பேரா சிரியர் பெருமானைச் - சீராரும் வஞ்சிமா மன்னர் மதித்தகுண சுந்தரனை நெஞ்சமே! நித்தம் நினை (1) தாலம் புகழும் திருஞான சம்பந் தப்பேர் முனிவாழ்ந்த கால மதனை ஆராய்ந்து கற்றோர் மெச்சக் கணித்திட்டோன், ஆலப் புழைமா நகருடைய அறிஞன் பெருமாள் அரும்புதல்வன் சீலஞ் சிறந்த சுந்தரனைச் சிந்தை மகிழ்ந்து போற்றுவமே. (2) “தேடி வைத்த செல்வமெலாம் திரைகொண் டோட வருந்திமுகம் வாடி மெலிந்த தமிழனங்கு மகிழ்ந்து மகிழ்ந்து கூத்தாட' ம.மா. சுந்தரன் பாமாலை கவி-10 -မျိုး- 129 -ံ -