பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 畿3G + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு நாடும் அறிய மனோன்மணிய நாட கத்தைச் செய்தளித்த நீடு புகழோன் சுந்தரனை நித்தம் நித்தம் போற்றுவமே. (5) வையம் புகழும் திருவஞ்சி வளநா டதனை முடிசூடிச் செய்ய முறைசெய் தரசாண்ட சேர மன்னர் சரிதமெலாம் ஐயம் இன்றிச் சிலையெழுத்து" ஆய்ந்து சொன்ன பேரறிஞன் துய்ய சீலன் சுந்தரன்பேர் சொல்லி நாளும் போற்றுவமே (6) ஆடும் தில்லை அம்பலவன் அடிகள் மறவா அன்புடையோன் பாடித் திருவா சகத்தேனைப் பருகிப் பருகி இன்புறுவோன் கோடைப் பதிசுந் தரமுனியைக் குருவாயக் கொண்ட குணசீலன் ஈடி லாத பேரறிஞன் எங்கள் பெரிய சுந்தரனே (7) சித்திரம் வரைந்து காண்போம்; சிலைகண்டு தொழுது நிற்போம்; சத்திரம் கட்டி வைப்போம்; தருமங்கள் பலவும் செய்வோம்; வித்தகன் சுந்த ரன்பேர் மெய்மையைாய் விளங்க வைத்தல் இத்தமிழ் நாட்டில் வாழும் எம்மனோர் கடமை யன்றோ? (8) 20 20. இங்கனம் கனவு கண்ட கவிமணியின் கருத்தை அண்மையில் தமிழக அரசு கத்தரனார் பல்கலைக் கழகம் கண்டு நனவாக்கியதை நாம் அறிவோம்.