பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-j- i32 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர்களுள் சிறப்பிடம் பெற்று விளங்கியவர் இந்த நாவலர் பெரு மான். கல்வித் தொண்டு, சமயத் தொண்டு, தமிழ்த் தொண்டு ஆகிய முத்தொண்டுகளையும் புரிந்து புகழ் பெற்ற மூதறிஞர். சென்ற நூற்றாண்டில் தமிழில் உரை நடை வளர்ச்சி பெறத் தொடங்கியிருந்த நிலையில் அதற்கு நல்வழி காட்டி பிழையற்ற எளிய உரைநடைத் தமிழை வளர்த்த பெரியார். இவரை நினைக்கும்போது இவர் இராமலிங்க அடிகள் அருளிய பாடல்கள்மீது தொடுக்கப் பெற்ற அருட்பா மருட்பா போராட்டம் நினைவிற்கு வாராமற் போகாது. இவரைப் பற்றிக் கவிமணி மூன்று பாடல்கள் இயற்றியுள்ளார். அவை: புண்ணியநாள் நாளெல்லாம் போற்றுநாள், செந்தமிழ்த்தாய் எண்ணி எதிர்பார்க்கும் இனியநாள் - மண்ணுலகில் - மேவுமுயர் சைவம் விளங்கிடுநாள்; ஆறுமுக நாவலர்கோன் தோன்றியநல் நாள் (1) ஆடும் தில்லை அம்பலவன் அடிகள் மறவா அன்புடையோன் பீடு பெறவே செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன், நீடு சைவம் இவ்வுலகில் நிலவச் செய்த குருநாதன் நாடு புகழும் ஆறுமுக நாவ லன்பேர் மறவோமே. (2) இல்லா ஏழை எளியவருக்கு இரங்கும் இனிய குணசீலன், கல்லா தவரின் கல்நெஞ்சம் கனியப் பேசும் கனிவுடையோன்