பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவனாகிய என் கவனத்தை காந்தியடிகளின் வாழ்க்கை ஈர்த்தது. 1932ல் நான் முசிறியில் 5ஆம் படிவ மாணவனாக இருத்தபோது ஒரு சில மாணவர்களுடன் திருச்சி வந்த காத்தியடிகளைப் பார்க்க வந்து திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் அப்பெருமானைக் கண்டு மகிழ்ந்தேன். 1942 ஆகஸ்டு புரட்சி என் மனத்தை ஈர்த்தது. குறைந்த தமிழறி வுள்ள நான் பாரதியின் பாடல்களில் ஆழங்கால் பட்டேன். 1943 முதல் தந்தை பெரியாரிடம் ஈடுபாடு கொண்டு நேரில் பழகியவனாதலால் சுயமரியாதை இயக்கம் என்னை ஈர்த்தது. பாவேந்தர் பாடல்களில் ஆழங்கால் பட்டு அநுபவித்தேன். 1948இல் பாவேந்தரை ஒரு வாரம் விருந்தினராக என் இல்லத்தில் தங்க வைத்து அவருடன் அளவளாவி மகிழ்ந் தேன். அவர்தம் தீவிர கொள்கை எனக்கு உடன்பாடு இல்லாத போதிலும், அவர்தம் பாடல்கள் என் உள்ளத்தை ஈர்த்ததால் அவர்தம் நூற்றாண்டு விழாவில் அவர் பாடல்களைப் பற்றி மூன்று திறனாய்வு நூல்களை எழுதி முடித்தேன்." இதற்கிடையில் புதுமைப் பதிப்பகம் "மலரும் மாலையும்" என்ற தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்களை வெளியிட் டது (1944 மூன்றாம் பதிப்பு). சத்துவகுணம் மிக்க எனக்கு சத்துவ குணமே வடிவாகவுள்ள பிள்ளையவர்களின் பாடல் கள் மிகவும் இனித்தன. பன்முறைப் படித்துப் படித்து மகிழ்ந் தேன். காரைக்குடி சென்றதும் (1950 சூலை முதல்) டி.கே.சி. வின் தொடர்பும் அவர்தம் பாடல்களைப் பற்றி அதிகமாக மேடைகளில் பேசிவந்த பேராசிரியர் ஆ.முத்துச்சிவம் தொடர்பும் ஏற்பட்டதால் மேலும் அவர்தம் பாடல்களில் ஈடுபாடு அதிகமாயிற்று. திருப்பதி சென்ற பிறகு தே.வி.யின் பாடல்களை தமிழ் எம்.ஏ.க்குரிய பாடத் திட்டத்தில் சேர்ந்து கற்பிக்கும் வாய்ப்பையும் பெற்றேன். அவர்தம் அனைத்துப் பாடல்களையும் கொண்ட பாரி நிலைய வெளியீடு (சனவரி, 1967) எனக்குக் கிடைத்தது. இப்பதிப்பு மிகவும் பயனுள்ள தாக அமைந்தது. 3. பித்து லத்தில் பாரதி நூற்றாண்டு விழா நினைவாக பாரதியின் பாடல்களைப் பற்றி தான்கு திறனய்வு நூல்களை வெளியிட்டு மகிழ்ந்தேன். . ஒன்று அப்பொழுது வெளிவந்தது. இரண்டு இப்பொழுது (2002) வெளி விக்குகின்றன.