பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 134 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு எவ்வேடு தேடிநீ எந்நாட்டில் எப்பதியில் எவ்வீடு நோக்கியின் றேகினையோ? - அவ்வான் அமிழ்தம் அமிழ்தமென அள்ளிஅள்ளிச் சங்கத் தமிழ்தந்த சாமிநா தா! (1) கண்ணும் சடையாமல் கையும் தளராமல் உண்ணப் பசியெழுவ தோராமல் - எண்ணியெண்ணிச் செந்தமிழ்த் தாய்க்குநீ செய்த திருத்தொண்டுக் கிந்தநிலத் துண்டோ இணை? (2) சித்திரத்திற் பார்ப்போம்; சிலைசெய்து கும்பிடுவோம்; புத்தகத்திற் போற்றிப் புகழ்ந்திடுவோம் - இத்தரையில் சந்தப் பொதிகைத் தமிழ்முனியென் றுன்னைநிதம் சிந்தையிற் கொண்டு தெளிந்து (3) திரு.வி.க.". தமிழ் முனிவர் திரு.வி.க. அவர்களை அறியாதார் இலர். பண்டிதர்க்கும் பாமரர்க்கும் பாலம் போன்றவர்; புலவர் கூட்டத்தையும், பாமரர் கூட்டத்தை யும் கவரும் வண்ணம் சொற் பெருக்காற்றுபவர். தமிழ் உரை நடைக்கு உயிர் கொடுத்து துடிப்புடன் இயங்கச் செய்தவர். இவர் திருநாடு அலங்கரித்ததுபற்றி ஒரு பாடல்: ஏழைத் தொழிலாளிக் கென்றும் துணைநின்று வாழும் தமிழின் வளம்பெருக்கி - ஊழியங்கள் செய்யப் பிறந்த திரு.வி.க. சென்றடைந்தான் தையலொரு பாகனிரு தாள். பண்டிதமணி": மகிபாலன் பட்டியின் மணி. அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையை அலங்க ரித்திருந்த பெரும்புலவர் இவர். வடமொழியிலும் புலமை 24. ம.ம. திரு.வி.க. பிரிவு 25. ம.ம. மகா மகோபாத்யாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார்