பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் - 4 - ‘தானம் வேண்டில் தருகின்றேன்; தருமம் வேண்டில் தருகின்றேன்; வானம் இடிந்து விழுந்திடினும் வரிதந் தும்மை வணங்கேன் என்று ஏனை வெள்ளைக் கம்பெனியார்க்கு எடுத்துக் கூறித் தென்னாட்டின் மானம் காத்த பாண்டியனை மறவா தென்றும் போற்றுவமே (4) சீமை வெள்ளைக் காரர்படை சிதறி யோட முறியடித்தோன்; ஊமைத் துரையென் றுலகுபுகழ் ஒப்பில் விசயன் முன்வந்த வீமன் வீர பாண்டியனின் வெற்றி முரசு முழக்கியிந்தப் பூமி மீதெந் நாளுமவன் புகழைப் பாடிப் போற்றுவமே (6) காய்ந்து போரில் வெள்ளையரைக் கறங்கச் செய்த ஆண்சிங்கம்; ஆய்ந்து வினைகள் செய்துநிதம் அறங்கள் காத்த அறிவுடையோன்; பாய்ந்து நாயை முயல்விரட்டும் பாஞ்சை யாண்ட பாண்டியனுக்கு ஏய்ந்த புகழை இனியதமிழ் இசையிற் பாடிப் போற்றுவமே (7) மானம் முற்றும் விலைகொடுத்து மண்ணை வாங்கி அரசாளும் ஈன வாழ்வை உள்ளத்தில் எள்ளத் தனையும் எண்ணாதோன்;