பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ i +2 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ஊன உடலை வெறுத்துதறி உலகில் அழியாப் புகழ்நாட்டி வானம் சென்ற வீரனைநாம் மறவா தென்றும் போற்றுவமே (8) அன்னை கஸ்தூரிபாய்: அண்ணல் இராமகிருஷ்ணருக்கு அன்னை சாரதாதேவி துணைவியாக வாய்த்ததுபோல் நாட் டுத் தந்தை காந்தியடிகட்கு அன்னை கஸ்தூரிபாய் துணை வியாக வாய்த்தார். அவரைப் பற்றி ஓர் இரங்கற்பா உள்ளது. வையம் புகழும் காந்திமகான் வாழ்க்கைத் துணையாய் வாழ்ந்துநிதம் செய்யும் தொழில்கள் ஒவ்வொன்றும் திருந்தச் செய்து கண்கண்ட தெய்வம் கணவன் என்றுள்ளம் தெளிந்த தாயே! நீயெம்மை வெய்ய துயரில் வீழ்த்தியின்று விண்ணா டாளச் சென்றனையே!” வ.உ.சிதம்பரனார்". இவர் கப்பலோட்டிய தமிழன். அஞ்சா நெஞ்சம் படைத்தவர். சிறையில் செக்கிழுத்த செம்மல். தமிழறிவும் தமிழுணர்வும் மிக்க நாட்டுப் பற்றாளர். இவரைப பற்றி மூன்று பாடல்கள் உள்ளன. கைநோவக் கால்நோவக் கல்லுடைத்துச் செக்கிழுத்து மெய்சோர்ந்தும் ஊக்கம் விடாதுநின்ற - ஐயன் சிதம்பரம் அன்றுசிறை சென்றிலனேல், இன்று சுதந்திரம் காண்பாயோ? சொல் (1) 35. மேலது கஸ்தூரிபாய் இரங்கற்பா 36. ம.மா. வாழ்த்து - காண்க