பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத் தமிழ் மாநாடு (எட்டாம் அமர்வு) தஞ்சையில் நடைபெற்றபொழுது அதில் தே.வி.யின் பாடல்களைப் பற்றி ஆய்வுக் கட்டுரை வழங்கினேன். தொடர்ந்து கவிமணியின் தமிழ்ப் பணி - ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் எழுதி முடித்தேன் (1995). அதன் கைப்படியைப் பெற்று திரு. ப.முத்துக்குமாரசாமி அவர்களின் பரிந்துரையால் கலைஞன் பதிப்பகம் மூலம் வெளிவருகிறது. வெளியிட்டவருக்கும் 'புருஷகாரம் செய்தவருக்கும் மிக்க நன்றி. நான் இன்று நன்னிலையிலிருப்பதற்கு இறையருளும் (விநாயகர், முருகன், ஏழுமலையான்) நான்கு பெரியவர் களின் ஆசிகளும் கார்ணம் என்பது என் அதிராத நம்பிக்கை. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய டாக்டர் (திருமதி) இராதா செல்லப்பன் (பேராசிரியர், துறைத் தலைவர், பாரதிதா சன் பல்கலைக் கழகம், திருச்சி) பேராசிரியர் எஸ்.வையாபு ரிப் பிள்ளை அவர்களின் அருமைப் பேத்தியாவார். பாட்டனா ரின் எல்லா நற்குணங்களும் மொழி இலக்கியப் புலமையும் கைவரப் பெற்றவர். என்பால் மதிப்பும் மரியாதையும் கொண்ட இப்பெருமாட்டி இந்நூலுக்கு அணிந்துரை அருளி யது இந்நூலின் பேறு என் பேறும் கூட. அணிந்துரை வழங்கிய அன்பருக்கு என் இதயங்கலந்த நன்றி. பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை அவர்கள் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களின் அருமைச் சீடர். பருந்தும் அதன் நிழலும்போல் அப்பெருமகனாரிடம் ஒட்டிக் கொண்டிருப்பவர். பிள்ளையவர்களின் அருங்குணங்க ளனைத்தும் மெய்ப்புகள் (Proofs) திருத்தும் திறனும் இவரிடம் அமைந்தன. பல்லாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழக திருக்குறள் இருக்கையை அலங்கரித்திருந்தவர். சத்துவ குணம் மிக்க சீலர். என்பால் மிக்க மதிப்பும் மரியாதையும் கொண்டவர். கவிமணியின்பால் பெருமதிப்பு கொண்டவர். தம் இல்லத்திற்குக் கவிமணியின் இல்லம்' என்று பெயரிட்டு 5. திரு.வி.க. 1934 முதல் அவர் மறையும் வரை தவத்திரு சித்பவாநந்த அடிகள் (1943 முதல் அவர் தம் பூத உடல் நீங்கும் வரை); பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை (1944 முதல் அவர் மறையும் வரை); தந்தை பெரியார் (1944 முதல் அவர் மறையும் வரை)