பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 144 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு நாமக்கல் கவிஞர்". சேலம் மாவட்டம், நாமக்கல் என்ற ஊரினர்: வெ.இராமலிங்கம் பிள்ளை என்ற இயற் பெயரி னர். சிறந்த ஒவியரும்கூட. கத்தியின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது என்ற இவர்தம் சந்தப் பாடல் இவருக்கு நாடளாவிய புகழைக் கொண்டு சேர்த்தது. முதல் அரசவைக் கவிஞர் ஆயுட்காலம் வரை இப்பதவியி லிருந்தவர். இவர்தம் மணிவிழா வாழ்த்தாக ஒரே ஒரு பாடல் உள்ளது. சிந்தையினால் வாக்கதனால் செய்கை தன்னால் தேசத்திற் கோயாது தொண்டு செய்தோன்; முந்தும் அன்பே உருவாக வந்தமூர்த்தி மூதறிஞன் காந்திமகான் வழியின் பற்றிச் செந்தமிழ்நாட் டாஸ்தான கவிஞ னாகிச் சீரோங்கி ராமலிங்க நண்ப னேநீ சந்ததமும் இவ்வுலகில் வாழச் செந்தில் சண்முகனை வேண்டிநிதம் போற்று வேனே. இராஜாஜி" சேலத்தைச் சார்ந்த வழக்கறிஞர். சிறந்த தேசத் தொண்டர். காந்தியடிகளின் இதயத்தை நன்கு அறிந்தவர்.அவருடன் மாறுபட்ட கருத்துகளையும் கொண் டவர். பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை மாநில முதலமைச்ச ராகப் பணியாற்றியவர். சுதந்திரம் பெற்ற பிறகு குடியரசுச் சட்டம் நிறைவேற்றும் வரையில் கவர்னர் ஜெனரலாகச் சுமார் மூன்றாண்டுக் காலம் பணியாற்றியவர். ஒரு சமயம் தமிழகக் காங்கிரசு கட்சியில் நெருக்கடி ஏற்பட்ட போது மீண்டும் ஒரு சில ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக இருந்தவர். காங்கிரசு கட்சி இவரை வேண்டும்போது கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொள்ளும். பிறி 38. ம.மா. வாழ்த்து - நாமக்கல் கவிஞர் 80ஆம் ஆண்டு நிறைவு விழா 39. ம.மா. வாழ்த்து - இராஜாஜி