பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணியின் தமிழ்ப்பணி ஒரு மதிப்பீடு سلجہ 146 مئی. எங்கும் மக்கள் இடரின்றி இன்பந் துய்க்கும் வழிகண்டு கங்குல் பகல்எக் கணமுந்தான் கடமை யாற்றும் அருளாளா! வங்க நாடு போற்றிநிதம் மகிழும் ராஜ கோபாலா! சங்க பாணி திருவருளால் தழைத்து வாழ்க! வாழ்கவே! (3) தந்திரிக்குத் தந்திரியாய் தாசனுக்கு தாசனாய் மந்திரிகள் மெச்சும் மந்திரியாய் - வந்துதித்த இன்னருட் செல்வா இராஜகோ பாலாநீ மன்னுலகில் வாழ்க மகிழ்ந்து (6) 5. அறிஞர் பெருமக்கள்: இவர்களுள் இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார், சொ. முருகப்பா, வெ.ப.சுப்பிரமணிய முதலியார், சோம. லக்குமணன் ஆகியோர் அடங்குவர். செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார்: இக்கால "வள்ளல்கள் வரிசையில் முதலிடம் பெறுபவர். கல்வித் தந்தை என்று போற்றும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவியவர். தமிழிசைத் தந்தை என்று பாராட்டும் வகையில் அண்ணாமலை மன்றம் நிறுவிய வர். இவரைப் பற்றி வாழ்த்தாக பதின்மூன்று பாடல்க ளும்", சரமகவிகளாக இரண்டு பாடல்களும்" உள்ளன. 40. ம.மா. வாழ்த்து - அண்ணாமலை மன்னர் 41. மேலது. சரமகவி - இராஜ சர் அண்ணாமலைச் செட்டியார் பிரிவு