பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் -o- i47 + வாழ்த்து தில்லை பதியுடையான் சிற்றம்பலந் தன்னில் அல்லும் பகலும்நின் றாடுகின்றான் - எல்லைக்கண் அண்ணா மன்லமன் அமைத்த கலைக்கழகம் கண்ணாரக் கண்டு களித்து. (3) தத்தளித்து நின்ற தமிழிசைச் செல்வாக்குப் புத்துயிரை ஊட்டியநற் பண்ணியவான் பத்தியுடன் எண்ணான் கறமும் இனிதா வளர்த்துமகிழ் அண்ணா மலைமன்ன னாம் (4) ஐயம் அகல உண்மைகளை ஆய்ந்து காணும் அறிவுடையோன் செய்யும் வினைகள் ஒவ்வொன்றும் திருந்தச் செய்யும் திறம்பெற்றோன்; கையிற் கொண்ட கருங்கல்லும் கனகம் சொரியச் செய்திடுவான்; வையம் புகழும் தனவணிகர் மணியாம் அண்ணா மலைமன்னே (6) உள்ளம் உருகச் செவிகுளிர ஒதும் நாவில் அமுதுறத் தெள்ளத் தெளிந்த செந்தமிழின் தெய்வ கீதம் செழித்தோங்க எள்ளத் தனையும் சலியாமல் இரவும் பகலும் உழைத்திடும்நம் வள்ளல் அண்ணாமலை மன்னன் வாழ்க! வாழ்க! வாழ்கவே! (8) அம்பொன் வேய்ந்த அரும்புகழும் அமுதம் கொணர்ந்த பெரும்புகழும் இம்பர் ஒருங்கு பெற்றகுலத்து எழுந்த அண்ணா மலைமன்னன்