பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 148 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு பம்பு மூட இருளகற்றும் பாது வாசி நல்லறங்கள் நம்பி உலகில் நிதம்வளர நன்மை செய்து வாழுகவே! (12) காந்தி யடிகள் திருவுள்ளம் கனிந்து போற்றும் குருதேவன் ஆய்ந்த அகில கலையாளன் அண்ணல் தாகூர் அமைத்தஉயர் சாந்தி நிகேதப் பெரும்பொழிலில் தமிழும் கமழச் செய்துபுகழ் ஏந்தும் அண்ணா மலைமன்னன் என்றும் வாழ்க வாழ்கவே! (13) சரமகவி. பண்ணியங்கள் பலபுரிந்தோன்; புவிநிறைந்த புகழுடையோன், புலவர் போற்றும் கண்ணியவான்; தில்லையிலே கலைவளரப் பெருங்கழகம் கண்ட கோமான்; தண்ணளியான்; நுண்ணறிவோன்; தனவணிகர் குலம்செய்த தவத்தால் வந்தோன்; அண்ணல் அண்ணா மலைமன்னை இழந்துலகம் அருந்துயரில் ஆழ்ந்த தம்மா (1) சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் பொருளாதார நிபுணர்; நடுவண் அரசின் நிதியமைச்சராகப் பணியாற்றியவர்.