பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் -j- 155 -}. மந்திரமோ? தந்திரமோ? மாயமோ? சண்முகத்தின் விந்தை நடிப்பு விசித்திரமோ? - செந்தமிழ்நாடு அன்றுகண்டு போற்றி அடிபணிந்து ஒளவையை இன்றுகண்ட காட்சி இது. (1) நாடும் இசையால் நடிப்பால் அரங்கமைப்பால் பீடுபெறு செந்தமிழ்ப் பேச்சழகால் - நீடுலகில் எவ்வெவரும் கண்டுமகிழ்ந் தின்புறுதற் கேற்றதிந்த ஒளவைவரு நாடகமே யாம். (2) இவை தவிர பல பெரியோர்கள் பிறந்த நாள் விழா, பல பெரியோர்கள் மறைந்த நாள், பள்ளிகள், கல்லூரிகள், இசை அமைப்புகள், நாடக அமைப்புகள் இவை பற்றிய வாழ்த்துப் பாடல்களும்; நாள், வார, பிறை, திங்கள் இதழ்கள் பற்றிய வாழ்த்துப் பாடல்களும்; பல நூல்க ளுக்கு அருளிய சிறப்புப் பாயிரங்களும் ஏராளமாக உள் ளன. இவற்றை, வாழ்த்து, சரமகவி, கதம்பம், முத்துக்குவி யல் என்ற பகுதிகளில் கண்டு மகிழலாம். இக்காலத்தில் வாரியார் சுவாமிகளிடத்தில் வாழ்த்துப் பாடல்கள் பெறும் மரபைப் போலவே அக்காலத்தில் கவிமணியிடம் வாழ்த் துப் பாடல்கள் பெறும் மரபு இருந்து வந்தது.