பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 6C + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு வேதன் முகத்தில் உதித்தவரே - இங்கு மேலா யெழுந்த குலத்தினராம்! பாத மதில்வந்த பாவியரே - என்றும் பாரில் இழிந்த அடிமைகளாம்! (4) என்று கிண்டல் பாணியில் சாடி, வேதியராலே மழைவருமேல் - வயல் வேலை செய்யாது விளைந்திடுமோ? வாதமெலாம் கட்டி வைத்திடுவோம் - ஒத்து வாழ்வதை மேற்கொண் டுழைத் திடுவோம் (9) என்று நடைமுறைப் பாதையை வகுத்துக் காட்டுகின்றார். ளவைப் பாட்டி சாதி இரண்டொழிய வேறில்லை... இட்ட்ார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்' என் பதை, சாதி இரண்டலால் வேறுளதோ? - ஒளவைத் தாயின் உரையும் மறந்தீரோ? ஆதி இறைவன் வகுத்ததுவோ? - மக்கள் ஆக்கிய கற்பனைத் தான்.இதுவோ? (7) என்பதை நினைவுகூரச் செய்து, நாயனார்வந்த திருக்குலத்தை - உயர் நந்தனார்வந்த பெருங்கு லத்தை தீய குலம்எனத் தள்ளுவரேல் - அது தெய்வம் பொறுக்கும் செயலாமோ! (8) என்று பரிதாபத்துடன் கேட்கின்றார். மேலும், உச்சி மரத்திற் சுவைக்கனியும் - தூரில் ஒடிப் பரந்தெழும் வேரதனில் நச்சுக் கனியும் பழுத்த பலாமரம் நானிலத் தெங்குமே கண்டதுண்டோ? (6) என்று எடுத்துக்காட்டுடன் வினவுகின்றார். 7. நல்வழி - 2