பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 162 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு என்கின்றார். அவர்கள்தாம் அறம் வளர்க்கும் நாயகி'யின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது கவிமணியின் அதிராத நம்பிக்கை (1). அவர்கள்தாம் அல்லும் பகலும் உழைப்பவர்கள்; அன்பு ததும்பி எழுபவர்; பின் தூங்கி முன் எழுபவர்கள். கல்லும் கனியக் கசிந்துருகிக் கடவுளைத் தொழுபவர்கள் (2). ஊக்கம் குலைந்தழும் ஏழைகளைக் காணில் உள்ளம் உருகித் துடிப்பவர்கள்: நோயாளிகளின் அருகில் இருக்கும் போது கண்ணினைக் காக்கும் இமைகள்போல் காப்பவர் கள் (3). பொங்கிய கலக்கம் சார்தரு போதில் பூரணத்தெளி வருள் அமைச்சராய்ச் செயற்படுபவர்கள்; குழந்தைகளை அள்ளியெடுத்து மடியிருத்தி, முத்தம் அளித்து, அவர்களின் அன்பைப் பெருக்குபவர்கள் (4,5). நீதிநெறி நில்லா கார்க் கோடகனையும்: நேர்வழியில் நடத்திச் செல்லும் திறனுடையவள், மானம் இழந்த கண்வ ரையும் உத்தமர் ஆக்க முயல்பவள் (6). ஆவி பிரியும் காலத்து அன்போடு அரவணைத்து அகலாதிருப்பவளும், யமனும் வருத்திடாமல் ஈசன் பாதம் நினைந்திடச் செய்பவு ளும் பெண்ணே (7). கணவனை இழந்த காரிகைக்கு இதம் சொல்பவளும் தந்தையை இழந்த நிலையிலே தனயனை மகிழ்ச்சியூட்டி வளர்ப்பவள் மங்கைதானே (8). சின்னஞ் சிறு வயதில் ஈசன் சேவடியின்மீது அன்பெறச் செய்பவ ளும் இளமைப் பருவத்தில் உள்ளத்தில் களிப்பு பெருகிடச் செய்பவளும் அன்னைதானே (9). இம்மை வாழ்வினை விட்டெழுந்து மனத்தை மாணிக் கச் சுடராக ஒளிரச் செய்து, விண்ணக வாழ்வின்மீது நாட்டம் செலுத்தும் பாங்கில் போதனை செய்பவள் பெண் னேயாவாள் (10). அன்பினுக்காக வாழ்பவளும், அன்பிற் காக ஆவியையும் போக்கத் துணிபவளும் இன்ப உரைகள்