பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 16డీ -- கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு என்று அந்தப் பேயின் நிலைமைகளைக் கூறுவார். இந்தப் பேய் நடமாடும் இடங்களை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுவார். கோவிலின் வாசற் படியில் - நிதம் கும்மாளி கொட்டிக் குதித்தாடி நிற்கும்: வாவிக் கரையிலும் நிற்கும் - அங்கு வந்த மனிதரை ஒட்டித் துரத்தும் (5) பிள்ளைமார் வீட்டிலும் தங்கும்; - உயர் பிராமணர் வீதியில் எங்குமே சுற்றித் துள்ளி விளையாடி நிற்கும் - அவர் சோமன் புடவைகளிற் சுற்றிக் கிடக்கும் (6) மண்கலத் துள்ளே இருக்கும்; - அதில் வைத்த பண்டத்தில் மறைந்தும் இருக்கும்; வெண்கலம் வெள்ளியொன் கண்டால் உடன் வெட்கம் அடைந்து வெளியேறிப் போகும் (7) என்ற பாடல்களில் அந்த இடங்களைக் காணலாம். 'தீண்டாமை திருக்கோயிலின் நிலைக்களம். புதுக்க விதை ஒன்று அதனைக் கிண்டல் செய்கின்றது - வள்ளி சிரித்தாள்' என்ற தலைப்பில். சப்பரத்திலே வள்ளியும் முருகனும் காஷ்லைட் துக்கியவாறு நான் முன்னால் சென்று கொண்டிருந்தேன் அபிஷேகத்திற்காக பன்னீர் பாட்டலுடன்வந்த பட்டர் என்மீது மோதிவிட்டார் "டேய் மடப்பயலே தீட்டாச்சேடா நான் குளிச்சிக் கிட்டில்லேடா சாமிகிட்ட போகணும்' நான் சப்பரத்தைப் பார்த்தேன் வள்ளியின் உருவம் சிரித்துக் கொண்டிருந்தது' 11. புதுக்கவிதை போக்கும் நோக்கும் - பக்.150-51