பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

率 168 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு கலைவாணரின் கிந்தனார் நாடகத்தில் அது பட்ட பாட் டைக் கிண்டலுடன் காட்டுகின்றார் அப்பெருமகன். இப் பேயை ஒழித்துக் கட்ட அதற்கு நகைச்சுவை விருந்து அளித்துக் கொண்டிருந்தார் சுமார் இருபதாண்டுக் காலம். இந்தப் பேயின் வலிமையினைக் காட்டும் பாங்கில், கண்ணான காந்தி மகானும் - இதைக் கண்டு நடுங்கிக் கடவுளை வேண்டி, உண்ணா திருந்தனர் என்றால் - இதன் ஊக்கம் சிறிதும் உரைத்திடப் போமோ? (14) முன்னம் பெரியோர் இதனை - வெட்டி மூடிப் புதைத்தும், உயிர்வலி கொண்டு பின்னும் முளைத்ததே, ஐயா! - இது பேய்களும் அஞ்சும் பெரியபேய், ஐயா (15) என்ற பாடல்களில் எடுத்துக்காட்டுகின்றார். ஆகவே, இத னைக் கப்பலில் ஏற்றி நடுக்கடலில் கொண்டு தள்ள வேண்டும் என்கின்றனர். சமூகத்தில் தீண்டப்படாதார் என்ற ஒரு சாதி இருப் கொடுமையிலும் கொடுமை. இதனை வேரில் வெந்நீர் விட்டு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது கவிமணியின் கருத்து. தீண்டாதார் விண்ணப்பமாக கேட்டோர் மனம் இரங்கும்படி முப்பத்தெட்டுப் பாடல்களில்" இவர்களு டைய நிலைமையக் காட்டுகின்றார். கண்ணப்பன் பூசைகொளும் கடவுள் திருக்கோயிலிலே நண்ணக் கூடாதோ? நாங்கள் நடையில்வர ஆகாதோ? (1) 12. ம.மா. சமூகம் - திண்டன்தார் விண்ணப்பம்