பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கவிமணி - ஓர் அறிமுகம் தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலில் தேர்ன்றாமை நன்று (236) என்பது வள்ளுவர் பெருமானின் வாக்கு. நல்ல பிறவி பற்றிய வள்ளுவர் கருத்தையொட்டிப் பிறவிப் பயன் பெறுபவர்கள் ஒரு சிலரே. புகழை அண்மைப் புகழ் என்றும், சேய்மைப் புகழ் என்றும் இரு வகையாகப் பிரித்து நோக்கலாம். அண்மைப் புகழ் என்பது ஒருவரைச் சுற்றி வாழும் மக்கள் அவருடைய நற்பண்புகளையும் நற்செயல்களையும் அறிந்து புகழ்வதாகும். சேய்மைப் புகழ் என்பது இக்காலத்தில் செய்தித் தாள்கள் வாயிலாகக் கிடைப்பது. இவர்தம் நற்பண்புகளும் நற்செயல்களும் இவை மூலம் பரவி சேய்மையில் உள்ளவர்களாலும் புகழப் பெறுவதாகும். கவிமணியவர்கட்கு இருவகைப் புகழ்களும் ஓரளவு கிட்டின. ஆனால், பாரதியாருக்கோ பாவேந்தர் பாரதிதாசனுக்கோ கிட்டிய அளவு இவருக்குக் கிட்டவில்லை. பிறப்பு: கவிமணி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் - சுசீந்திரத்தை அடுத்துள்ள தேரூர் என்ற சிற்றுரில் 1876-இல் (தாது ஆண்டு ஆடித் திங்கள் 14ஆம் நாள்) பிறந்தார். தந்தையார் சிவதாணு பிள்ளை; தாயார் ஆதிலட் சுமி அம்மாள். சிவதாணுப் பிள்ளை நாஞ்சில் நாட்டிலே முதன் முதலில் ஆங்கிலம் படித்தவர்களுள் ஒருவர் உப் பள விசாரணை அதிகாரியாகப் பணியாற்றியவர். தாயார் ஆதிலட்சுமி அம்மாள் மாணிக்க வாசகம் பிள்ளை மூத்த 1. குறள் - புகழ்-8