பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

学 氯了4 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு பெரும்பாலும் வெள்ளை வேட்டி வேலை (white colar jobs)க்காக அலையும் கூட்டமே அதிகம். பெரும்பாலும் இவர்களிடம் தன்னம்பிக்கையே இருப்பதில்லை. சிலரிடம் தன்னம்பிக்கை உள்ளது. இவர்கள் எந்த வேலையையும் மேற்கொள்ளத் துணிகின்றனர். இந்நிலை யைக் கவிமணி, நெஞ்சின் நூலை நினைப்பது விட்டு, இனிப் பஞ்சின் நூலிற் பழகத் துணிகுவன்; கெஞ்சு வாழ்க்கையும் கேடும் ஒழியுமே விஞ்சு செல்வமும் மேன்மையும் தங்குமே (6) என்று இத்துணிவினைச் சித்திரித்துக் காட்டுவார். செல்வச் செருக்கையும், வறுமைத் துன்பத்தையும் பிஞ்சு மனங்கள் வாயில் வைத்துப் பேசுகின்றார்." அடி மனத்திலிருந்து வரும் துக்க உணர்வை நகைச்சுவையுடன் வெளிப்படுவதைக் காணலாம்; எள்ளல் குறிப்பும் அதில் நிழலிடுவதையும் உணரலாம். உடல்நலம் பேணல்". சமூக நலம் பேணுவதில் முக் கிய கூறு உடல்நலம் பேணல் ஆகும். தனிப்பட்டோரின் உடல்நலம் நன்கு அமைந்தால், சமூக நலம் சிறப்புடன் பொலிவுறும். சுற்றுப்புறச் சூழ்நிலையைக் காக்கும் பொறுப்பு தனிப்பட்டோரிடம்தான் உள்ளது. நோய்க்கு இடங் கொடேல்" என்பது ஒளவைப் பாட்டியின் அமுத மொழி. கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்பது வழிவழி மக்களிடையே வழங்கும் பொன் மொழிகள், இதையே கவிமணியும் கும்மி மெட்டில், 22. சமூகம் செல்வச் சிறுமியர் களிப்பு: ஏழைச் சிறுமியர் மனப்புழுக்கம் - காண்க. 23. சமூகம் - உடல்நலம் பேணல் 24. ஆத்திசூடி - 75