பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் + 177 + வேலைசெய் யாது.சோம் பேறிகளாய் - நிதம் வீட்டி லிருப்பது ஆகாதம்மா! மூலையி லிட்ட இரும்பு துருவேறி மோசமாய்ப் போவதும் கண்டிலையோ? (10) வேலைகள் செய்து உடல்வன்மைபெறின் - இந்த மேதினி முற்றும் நமதே. அம்மா! கால னையும்வென்று வாழ்வோம், அம்மா! - ஒரு காலும் தளர்ச்சியுண் டாகா தம்மா” (11) என்று பின்மொழிவார். முத்தாய்ப்பாக, உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்" என்று முன்மொழிந்த கவிமணி கும்மிப் பாட்டில், நோய்கள் உடலை அணுகிடாமல் - ஆயுள் நூற்றினும் மேலாய் வளரும் அம்மா” என்று வேறுவிதமாகப் பின்மொழிவார். இன்னும், உள்ளம் உடலையே பற்றிநிற்கும் - இந்த உண்மை மறந்திட லாகாதம்மா! தெள்ளத் தெளிந்த அறிவுடை யோர்மொழி தெய்வமொழியென் றுணர்வாய், அம்மா" (2) 33. சுகாதாரக் கும்மி - 10,11 34. உடல்நலம் பேணல் - 1 34. சுகாதாரக் கும்மி - 12 36. சுகாதாரக் கும்மி - 2,3 கவி-13