பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 178 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு மாசே டறியாமை நேசமாகித் - தம்முள் வாய்த்த மணம்செயும் காரணத் தால் பேசும் உலகினில் நோய்கள் எனும்பல பிள்ளைகள் வந்து பிறக்குதம்மா! (3) சுத்தமே என்றும் சுகமளிக்கும் - தீய சோம்பலை ஒட்டித் துரத்தும், அம்மா! இத்தரை வாழ்வைப் பெருக்கும் அம்மா! - அதற்கு ஈடேதும் இல்லையான் சொன்னேன், அம்மா!' என்றும் அறிவுரை கூறுவார். தனிப்பட்டவர் உடல்நலம் சமூகநலம் பேணுவதாக அமையும். மதுவிலக்கு: குடிப்பழக்கம் மக்களைப் பீடித்து வாட் டும் ஒரு பொல்லாத நோய். ஏழை மக்கள் நாட்டுச் சரக்கில் மூழ்கித் தம்மை மறக்கின்றனர். செல்வர்கள் 'சீமைச் சரக்கில் திளைத்து விபசாரத்தில் ஆழ்கின்றனர். மதுவிலக்குக் கொள்கையும் அரசிடம் மதில்மேல் பூனை யாகக் காட்சி அளிக்கின்றது. வருமானத்தை நினைந்து, ஊதாரிச் செலவை மறந்து இருப்பதால் வந்த வினை இது. இதற்கு ஒரு 'விடிவெள்ளி' என்று தோன்றுமோ? மத்திய அரசுக் கொள்கையும் மாநில அரசுகளின் கொள்கையும் வேறு வேறாக மாறுபட்டிருப்பதால் விளையும் தீங்கு இது. கவிமணி மதுவிலக்கை முற்றிலும் ஆதரிக்கின்றார்.” கள்ள ரக்கா குலத்தோடுநீ கப்ப லேறத் தாமதம்ஏன்? வள்ளல் எங்கள் காந்திமகான் வாக்கு முற்றும் பலித்ததினி, எள்ளத் தனையும் உன்வாழ்வுக்கு இடமிங் கில்லை, இல்லையடா! 37. மேலது - 4 38. சமூகம்: மதுவிலக்குக்ப் பாடல்கள்