பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் + 179 + தெள்ளத் தெளியச் சொன்னேன்நான் தெரிந்து ஒளிந்து தொலைந்திடுவாய் (2) என்ற பாடலில் இதனைக் காணலாம். பிச்சைக்காரர் நிலை: நம் காட்டில் பிச்சைக்காரர் நிலை யைச் சொல்லி முடியாது. அஞ்சல் நிலையம், பேருந்து நிலையம், இருப்பூர்தி நிலையம், ஒடும் இருப்பூர்தி, கோயில், குளம் முதலிய இடங்களில் எல்லாம் கையேந்தி நிற்பவர்களைக் காணலாம். திருப்பதியில் பிச்சை எடுப்ப தையே ஒரு தொழிலாகக் கொண்டிருப்பதைக் காணலாம். வீடு வாசல் இருக்கும் முதியோர்கள் கூட இத்தொழிலில் இறங்குகின்றனர். திருத்தலப் பயணிகளின் கூட்டம் அதி கம் இருப்பதால் இத்தொழில் சுறுசுறுப்பாக நடைபெறு கின்றது. சிலருக்குக் கோவாப்பரேட்டிவ் வங்கியிலும் சேமிப்புக் கணக்குகள் இருப்பதை அறிவேன். நெற்றியில் திருமண் காப்பு அல்லது விபூதி பட்டை இட்டுக் கொண்டு திரியும் முதியோர் கூட்டம் உண்டு; இதில் ஆண் பெண் இருபாலாரும் உண்டு. சிலர் பகல் முழுதும் இரவு 9 மணி வரை சுற்றித் திரிந்து, உணவு விடுதிகளில் உண்டு, இரவு ஒன்பது மணிக்குமேல் ஆள் இயக்கும் மிதி வண்டியில் வீடு திரும்புகின்றனர். மீதி வருவாயை வங்கியில் செலுத் துகின்றனர். அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த போது (மார்ச்சு - ஜூன் 2002) அங்கும் பிச்சைக்காரர்கள் இருப்ப தைக் கண்டு வியந்தேன். கவிமணி காட்டும் பிச்சைக்காரர்கள் கும்மாளம், அடிக்கின்றனர்.” தம்மை ஆண்டியாகவுள்ள ஆதிசிவனு டன் சேர்ந்துக் கொண்டு மன அமைதியுடன் வாழ்கின்ற னர். அவர்கள் நிலையை அவர்கள் வாயில் வைத்துப் 39. பிச்சைக்காரர். கும்மாளம்