பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 星84 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு மீது சாயத் தொடங்கியது. அவற்றின் பெருமையை எண்ணி எண்ணி இவர் மனம் கனியத் தொடங்கியது. உயர்ந்த இலட்சியங்கள் யாவும் திரண்டு உருப்பெற்று விளங்குவதுபோல் தோன்றிய புத்தர் பெருமான் வரலாற் றில், தம் மனத்தைப் பறிகொடுத்தார். ஆங்கிலத்தில் எட் வர்ட் ஆர்னால்டு எழுதிய ஆசிய சோதி (Light of Asia) என்ற நூலைப் பலமுறை கற்று அந்த நூலின் அழகையும் புத்தர் பிரானின் குணநலன்களையும் அநுபவித்து மகிழ்ந்தார். இந்த அநுபவத்தின் விளைவாகப் புத்தர் அவதாரம்", ‘புத்தரும் ஏழைச் சிறுவனும்', 'கருணைக்கடல்', 'புத்தரும் மகனை இழந்த தாயும்', 'காதல் பிறந்த கதை முதலிய கவிதைத் தொகுதிகள் தோன்றின. இவற்றின் தொகுப்பே ஆசிய சோதி என்ற அரியதொரு நூலாக வடிவம் பெற்றது." இப்பாடல்களின் சில பகுதிகள் தற்காலத் தமிழ் இலக்கி யத்தில் ஈடும் எடுப்புமின்றித் தலைசிறந்து விளங்குவதைக் கண்டு மகிழலாம். உண்மையான பண்பாடு: இந்தப் பண்பாடு கால, தேச நியதிகளுக்குள் அடங்குவதன்று. பிற நாடுகளிலும் பிற சமயங்களிலுமுள்ள பெரியோர்களையும் சான்றோர்களை யும் பாராட்டிப் போற்றும் இயல்பு வாய்ந்தது. ஈழ நாட்டுப் புலவர் ஆறுமுக நாவலர், நம் நாட்டுச் சான்றோர்களாகிய வள்ளுவர், கம்பர், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, தேசிய கவி பாரதியார் இவர்களைப் பற்றி இயற்றியுள்ள பாடல் கள் தமிழ் மக்கள் பண்பாட்டை அநுபவித்த பாங்கை அற்புதமாக விளக்க வல்லன. இவர்களைப் பற்றி விரிவாக இந்நூலில் பிறிதோர் இடத்தில் காட்டப் பெற்றுள்ளது." 6. இந்த நூலின் பிறிதோர் இடத்தில் ஆராயப் பெற்றுள்ளது. 7. இயல் - 7 காண்க