பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பாட்டுக் கூறுகள் -j- i89 -j என்ற பாடல்களில்" இயற்கையைக் கடந்தும் அதற்கு ஆதாரமாய் நின்றும் விளங்கும் தெய்விக சக்தியை இவர் அநுபவிக்கும் திறத்தை உணர்த்துகின்றது. மழலையர் பேசுவதைக் குறித்து இவர் பாடிய பாடல்களும் இத்த கைய அநுபவத்தின் பெருமையை நமக்குக் புலனாக்குகின் றன. பூவின் அழகுனது முகத்தில் - என்றும் பொலிந்திடும் காரணம்என்? குழந்தாய்! தேவரும் கண்டறியாக் காட்சி - யானும் தெளிவுறக் கண்டபலன் அம்மா! (6) ஆசைக் குழந்தாய்!இச் செவிகள் - உன்னை அடைந்த வரலாறே துரையாய்? ஈசனும் பேசிட வாய்திறந்தான் - கேட்க இவையும் எழுந்தன, என்அம்மா! (8) இன்பச் சிறுகரங்கள் இவைதாம் - உனக்கு எவ்வா றமைந்தன? என்குழந்தாய் அன்பு வளர்ந்திவ்வுரு வாகி - என்னை அண்டி அணைத்திருக்கு தம்மா! (9) இவை முன்னற் குறிப்பிட்டதற்குச் சான்றுகளாகும். நிலையாமை: நம் நாட்டு அடிநிலைக் கொள்கைகளுள் மற்றொன்று நிலையாமையை வற்புறுத்துவதாகும். வள்ளு வப் பெருந்தகையும், நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வான்மை கடை (குறள் - 331) என்று கூறுவர். இளமை, யாக்கை, செல்வம் இவற்றின் நிலையாமையை உணர்த்தி நிலைத்த இன்பத்தை நல்குவ 16. ம.மா. இயற்கை இன்பம் - கிளி - 13.14 17. மேலது - உள்ளமும் உணர்வும் - குழந்தை - 6, 8, 9